×

இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: இலங்கை அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் உள்ள மலைவாழ் மக்களுக்காக ரூ3,000 மில்லியனை இந்திய அரசு சார்பில் அளித்தனர். அதோடு மீனவர்கள் பிரச்னை பற்றியும் பிரதமர் மோடியிடம் பேசினோம். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்தோம். அப்போது இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டியது பற்றி வலியுறுத்தினோம்.

இது சம்பந்தமாக இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சரிடமும் நான் பேசியுள்ளேன். இந்திய மீனவர்களின் இயந்திரப்படகுகளை விடுவிப்பது சம்பந்தமாக இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் நான் பேசுவேன். இலங்கை மீன் வளத்துறை அமைச்சரிடமும் ஆலோசனை நடத்த உள்ளேன். எனவே இலங்கையில் உள்ள மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிக்காக தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம். நவம்பர் மாதம் மலைவாழ் மக்களின், ‘நான் 200’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு வைத்திருக்கிறோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்திருக்கிறோம். இந்திய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: இலங்கை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Minister ,Jeevan Thondaiman ,Chennai Airport ,Sri Lanka ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...